close
Choose your channels

சேரனின் 'திருமணம்' சென்சார் தகவல்கள்

Saturday, February 9, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் சேரன் 'பாரதி கண்ணம்மா'வில் தொடங்கி பல வெற்றிப்படங்களை இயக்கிய நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டுக்கு பின் அவர் இயக்கியுள்ள திரைப்படம் 'திருமணம்'. இந்த படத்தின் டிரைலர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு திருமணத்தில் மணமகன், மணமகள் வீட்டார்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகள் மிக இயல்பாக இந்த படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை இந்த நான்கு நிமிட டிரைலரில் இருந்து தெரிய வந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்துவிட்டதை அடுத்து மிக விரைவில் அதிகார்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது

சேரன், சுகன்யா, உமாபதி ராமையா, காவ்யா சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, பாலசரவணன், ஜெயப்பிரகாஷ், மனோபாலா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவும், பொன்னுவேல் தாமோதரன் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment