திரைப்படத்தில் கூறிய கருத்தை நிஜ வாழ்க்கையிலும் செய்து காட்டிய சேரன்.. மகள் திருமணத்தில் ஆச்சரியம்,.!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் சேரன் தான் இயக்கிய ’திருமணம்’ என்ற திரைப்படத்தில் கூறிய கருத்துக்களை தனது மகள் திருமணத்தில் செய்து காட்டிய நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இயக்குனர் சேரனுக்கு பிரியதர்ஷினி, தாமினி ஆகிய இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் மூத்த மகள் பிரியதர்ஷினிக்கு இன்று சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் எளிய முறையில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுக்க, பாரதிராஜா, சீமான், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முன்னிலையில் மிகவும் எளிமையாக திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு ஆகும் பணத்தை கையில் கொடுத்து விடுங்கள், அது எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், திருமணத்தை எளிமையாக கோவிலில் நடத்துங்கள் என்று மகள் விரும்பி கேட்டதன் பெயரில் அந்த தொகையை சேரன் மகிழ்வுடன் தனது மகளுக்கு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சேரன் இயக்கத்தில் உருவான ’திருமணம்’ என்ற திரைப்படத்தில் தனது வீட்டு திருமணத்தை மிக எளிமையாக நடத்தி திருமண செலவுக்காக வைத்திருக்கும் பணத்தை மணமக்கள் பெயரில் டெபாசிட் செய்து அதற்கான டாக்குமென்ட்களை கொடுப்பது போன்ற காட்சிகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே தனது திரைப்படத்தில் என்ன கருத்து கூறியிருந்தாரோ அந்த கருத்து மற்றவர்களுக்கு என்று இல்லாமல் தன்னுடைய வாழ்க்கையிலும் செய்து காட்டிய சேரனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் தனது மகளின் திருமணத்திற்கு வருகை தந்து சிறப்பாக நடத்தி கொடுத்த அனைவருக்கும் தனது நன்றி என்று சேரன் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments