பிரபல இயக்குனர் சேரனின் முக்கிய அறிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தலில் நடிகர்கள் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டாலும், தேர்தலுக்கு பின்னர் இரு அணிகளும் ஒன்றிணைந்து பணியாற்ற தொடங்கிவிட்டனர் என்பதை ஏற்கனவே நடந்த ஒரு சில சம்பவங்களின் மூலம் தெரிந்து கொண்டோம். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒருசிலர் அத்துமீறி பேசியவர்களும் தற்போது தங்களுடைய தவறை உணர்ந்து வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சரத்குமார் அணிக்காக தேர்தல் பணி செய்த பிரபல இயக்குனர் சேரன், தேர்தலின்போது விஷால், கார்த்தி, ரித்தீஷ் குறித்து தவறாக பேசியிருந்தால் தான் வருத்தம் தெரிவித்து கொள்வதாக அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார்.
நாசர், விஷால், பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் மீது தனக்கு எந்தவிதமான தனிப்பட்ட விரோதங்களும் இல்லை என்றும், நடிகர்களுக்காக இரவுபகல் பாராமல் பாடுபட்ட சரத்குமாருக்காகவே அந்த அணிக்கு பிரச்சாரம் செய்ததாகவும் சேரன் கூறினார்.
மேலும் விஷால் மற்றும் கார்த்தி ஆகியோர்களை தன்னுடைய படத்தில் நடிக்க அழைப்பு விடுத்தபோது அவர்கள் தனக்கு சரியான முறையில் பதில் கூறவில்லை என்றும், அந்த கோபத்தில் அவர்களை பற்றி உணர்ச்சிவசப்பட்டு ஒருசில வார்த்தைகளை பேசிவிட்டதாகவும் அதற்காகவும் தான் வருத்தப்படுவதாகவும் இயக்குனர் சேரன் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com