கைதட்டியது தவறா? முதல்நாளில் மோதிக்கொண்ட சேரன் - பாத்திமா பாபு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பிரச்சனையின்றி, கருத்துவேறுபாடின்றி செல்லும் வரை சுவாரஸ்யம் இருக்காது. எப்போது மோதல் தொடங்குகிறதோ அப்போது முதல் டி.ஆர்.பி எகிறும். அந்த வகையில் சற்றுமுன் வெளியாகியுள்ள இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோவில் பாத்திமா பாபுவுக்கும், சேரனுக்கும் இடையே ஒரு சின்ன பிணக்கு ஏற்பட்டிருப்பது போல் தெரிகிறது.

பிக்பாஸ் வீட்டில் தண்ணீருக்கும், எரிவாயுவுக்கும் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறித்து நேற்றைய நிகழ்ச்சியை பார்த்த அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் பிக்பாஸ் பேசும்போது, 'இந்த உலகில் தண்ணீருக்கும் எரிவாயுவிற்கும் தட்டுப்பாட்டு இருப்பது அனைவரும் தெரிந்ததே. அதனால் தண்ணீருக்கும், எரிவாயுவுக்கும் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது, எனவே இரண்டையும் சிக்கனாக பயன்படுத்த வேண்டும்' என்று கூறினார். இதற்கு போட்டியாளர்கள் அனைவரும் கைதட்டினர்.

இதனையடுத்து எழுந்த பாத்திமாபாபு, 'தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பது ஒரு அவலநிலை. அது கைதட்டி வரவேற்க வேண்டியது கிடையாது' என்று கூறினார். அதற்கு பதிலளித்த சேரன், 'லிமிட்டேஷன் கொண்டு வந்ததற்காக கைதட்டுகிறோம்' என்று கூற அதற்கு பாத்திமாவின் முகம் சுருங்குகிறது. இதனையடுத்து இதுகுறித்து வாக்குவாதம் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


 

More News

இந்த முறை பிக்பாஸ் ஈழத்தமிழர்களுக்காகவா?

பிக்பாஸ் 1 நிகழ்ச்சி மக்களை கவர்ந்த அளவுக்கு பிக்பாஸ் 2 மக்களை திருப்திபடுத்தவில்லை என்று கூறப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் பிக்பாஸ் 1 நிகழ்ச்சியில் பாசிட்டிவ் எனர்ஜியை தந்த ஓவியா

யானை சிலைக்கு அடியில் மாட்டிக்கொண்ட பெண்: வைரல் வீடியோ

கேமிரா செல்போன் அறிமுகமான நாளில் இருந்து செல்பி என்ற வியாதி பலரிடம் தொற்றிக்கொண்டது. விளையாட்டாக எடுக்கும் செல்பிகள் சிலசமயம் விபரீதமாக

முதல் நாளிலே ஆட்டம், பாட்டம், முத்தம், ரத்தம் ரணகளத்துடன் தொடங்கும் பிக்பாஸ்

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியவுடன் ஒரு வாரம் கழித்தே சூடு பிடிக்கும். ஆரம்பத்தில் நண்பர்களாக இருக்கும் போட்டியாளர்கள் ஒருவாரம் கழித்தே குரூப்பாக பிரிவது,

முதல் நாளிலேயே ஆரம்பிக்கப்பட்ட ஆர்மி! யாருக்கு தெரியுமா?

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக்பாஸ் 3' நிகழ்ச்சி நேற்று முதல் தொடங்கிய நிலையில் நேற்றைய முதல் நாள் நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

பிக்பாஸ் வீட்டில் இருந்த ரஜினி ஓவியம் அகற்றமா? பிரேம்ஜியின் மாஸ் பதில்!

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்குள் ஒருசில பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது பிக்பாஸ் வீட்டை சுற்றிப்பார்த்த பத்திரிகையாளர்கள்,