தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகம்

  • IndiaGlitz, [Friday,October 13 2017]

தளபதி விஜய்யின் 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதே தினத்தில் சசிகுமாரின் 'கொடிவீரன்' உள்பட ஒருசில படங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதுமட்டுமின்றி கார்த்திக் சுப்புராஜின் 'மேயாத மான்' திரைப்படமும் தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இணைந்ததாக வெளிவந்த செய்தியையும் காலையில் பார்த்தோம். இந்த நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான 'சென்னையில் ஓர் நாள்' படத்தின் இரண்டாம் பாகமான 'சென்னையில் ஓர் நாள் 2' திரைப்படமும் தற்போது தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தியை உறுதி செய்யும் வகையில் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்று சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சரத்குமார், நெப்போலியன், அஜய், சுஹாசினி, ராம்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஜேபிஆர் இயக்கியுள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு விஜய்தீபக் ஒளிப்பதிவும், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பும் செய்துள்ளனர். முதல் பாகத்தை போலவே இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த படமும் வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.