பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் மணிகண்டனை, கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
- IndiaGlitz, [Thursday,June 03 2021]
அதிமுக - வின் முன்னாள் அமைச்சரான மணிகண்டன் தன்னை ஏமாற்றிவிட்டதாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை சாந்தினி அண்மையில் புகார் அளித்துள்ளார்.
சென்ற சில வருடங்களுக்கு முன்பு தினகரனுடன் கைகோர்த்து, 18 ஆதரவு எம்எல்ஏ-க்கள், முதல்வர் பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு தந்தனர். இந்த விவகாரத்தில் பதவி பறிக்கப்பட்ட எம்எல்ஏ-களில் மணிகண்டனும் ஒருவர்.
இந்தநிலையில் நாடோடி படத்தில் நடித்த நடிகை சாந்தினி தேவாவுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார் முன்னால் அமைச்சர் மணிகண்டன். கடந்த 5 ஆண்டுகளாக அவரை காதலித்துவிட்டு, திருமணம் செய்துகொள்வதாகவும் கூறியுள்ளார். இதற்கிடையே அவருடன் நெருங்கி பழகியுள்ளதால் சாந்தினி கருவுற்று இருக்கிறார். இதனால் தன்னை திருமணம் கொள்ளவேண்டும் என கூறியதற்கு, மணிகண்டனோ கருவை கலைக்க வைத்து, அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும் திருமணம் செய்யச்சொல்லி வற்புறுத்தினால், அந்தரங்க புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று , கூலிப்படையை வைத்து மிரட்டியுள்ளார்.இந்நிலையில் தான் சாந்தினி தக்க ஆதாரங்களுடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், மணிகண்டன் மீது இன்று புகாரளித்துள்ளார்.
ஆனால் மணிகண்டன் சார்பாக சாந்தினி பணம் பறிக்கும் கும்பல், அவரை யார் என்றும் தெரியாது என்று கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து நடிகை அளித்த புகாரின் பேரில், மணிகண்டன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்து விசாரிக்கவும், காவல் துறையினர் திட்டமிட்டனர்.
மணிகண்டன் சென்னை உயர்நீதிமன்றத்தில், முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் இவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று, நடிகை சாந்தினி ஆட்சேபனை மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள், மணிகண்டனை வரும் ஜூன்-9 வரை கைது செய்யக்கூடாது என
உத்தரவிட்டுள்ளது.