டெண்டர் பிரச்சனை....! மாநகராட்சி சோசியல் மீடியாவை கையாள எவ்வளவு கோடிகள்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை மாநகராட்சி சோசியல் மீடியாவை கையாள, கோடிக்கணக்கில் டெண்டர் வழங்கப்பட்டதாக கூறிய சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
சென்னை மாநகராட்சி குறித்த சிறப்பான சேவைகள், திட்டங்கள், செய்திகள் அடங்கிய விழிப்புணர்வு வீடியோக்கள் போன்றவற்றை தயார் செய்து வெளியிடவும், மாநகராட்சி சோசியல் மீடியாவை கையாளவும் டெண்டர் கோரப்படும். இப்பணிகளுக்காக ஒரு ஆண்டிற்கு ரூ.2 கோடியே 31 லட்சம் என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டு, சென்ற பிப்ரவரியில் கே.எஸ் சொல்யூசன்-க்கு டெண்டர் தரப்பட்டது.
இந்நிலையில் டெண்டர் விவகாரத்தில் கே.எஸ் சொல்யூசன், வேறொரு சிறிய நிறுவனத்திற்கு, குறைவான விலையில் உள் டெண்டர் தந்து பணிகளை செய்ததாக கூறப்பட்டது. இப்படி முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி துணை ஆணையர் பிரசாந்த் கூறியிருப்பதாவது, "டெண்டர் எடுத்துக்கொண்ட நிறுவனம் பணிகளை செய்ய முன்வராத காரணத்தால், ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது, இந்த சமூக வலைதள பக்கங்களை கையாள்வது குறித்து வேறு நடவடிக்கைகள் எடுக்க ஆலோசித்து வருகிறோம்" என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments