சென்னை 28 II', 'சைத்தான்' படங்களின் சென்னை வசூல் நிலவரம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த வெள்ளியன்று வெளியான வெங்கட்பிரபுவின் 'சென்னை 28 II' படம் அனைத்து ஊடகங்களாலும் பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்று நல்ல வசூலை அள்ளி வருகிறது. கடந்த வார இறுதி நாட்களில் இந்த படம் சென்னையில் 22 திரையரங்க வளாகங்களில் 336 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,21,58,220 வசூல் செய்துள்ளது. அடாத மழையிலும் திரையரங்குகளில் 95% பார்வையாளர்கள் நிரம்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெங்கட்பிரபு டீமுக்கு கிடைத்த மற்றுமொரு நல்ல ஒப்பனிங் வசூல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் கடந்த 1ஆம் தேதி வெளியான விஜய் ஆண்டனியின் 'சைத்தான்' திரைப்படமும் இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக திரையரங்குகளில் நல்ல வசூலை கொடுத்து வருகிறது.
கடந்த வாரம் சென்னையில் சைத்தான் படம் 17 திரையரங்குகளில் 155 காட்சிகள் ஓடி ரூ.29,76,210 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 70% பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் கடந்த 1ஆம் தேதியில் இருந்து 11ஆம் தேதி வரை ரூ.2,01,45,370 வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com