சென்னை 28 II', 'சைத்தான்' படங்களின் சென்னை வசூல் நிலவரம்

  • IndiaGlitz, [Tuesday,December 13 2016]

கடந்த வெள்ளியன்று வெளியான வெங்கட்பிரபுவின் 'சென்னை 28 II' படம் அனைத்து ஊடகங்களாலும் பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்று நல்ல வசூலை அள்ளி வருகிறது. கடந்த வார இறுதி நாட்களில் இந்த படம் சென்னையில் 22 திரையரங்க வளாகங்களில் 336 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,21,58,220 வசூல் செய்துள்ளது. அடாத மழையிலும் திரையரங்குகளில் 95% பார்வையாளர்கள் நிரம்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெங்கட்பிரபு டீமுக்கு கிடைத்த மற்றுமொரு நல்ல ஒப்பனிங் வசூல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கடந்த 1ஆம் தேதி வெளியான விஜய் ஆண்டனியின் 'சைத்தான்' திரைப்படமும் இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக திரையரங்குகளில் நல்ல வசூலை கொடுத்து வருகிறது.

கடந்த வாரம் சென்னையில் சைத்தான் படம் 17 திரையரங்குகளில் 155 காட்சிகள் ஓடி ரூ.29,76,210 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 70% பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் கடந்த 1ஆம் தேதியில் இருந்து 11ஆம் தேதி வரை ரூ.2,01,45,370 வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஜெயலலிதா மகள் என்று கூறப்படும் இந்த பெண் உண்மையில் யார்?

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தன்னுடைய அரசியல் வாரிசு மற்றும் குடும்ப வாரிசு யார் என்று சொல்லாமலே மரணம் அடைந்துவிட்டதால் அவர் வகித்து வந்த பதவி மற்றும் அவருடைய சொத்துக்களை அடைய பலர் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

வெங்கட்பிரபு பாய்ஸ்களின் அபாரமான தமிழக வசூல்

வெங்கட்பிரபு இயக்கிய 'சென்னை 28II' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி எதிர்பார்த்த வெற்றியைவிட மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்தின் சென்னை வசூல் குறித்த தகவல்களை சற்று முன் பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் தமிழக ஓப்பனிங் வசூல் சுமார் 7.5 கோடியை தொட்டுவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஜெயலலிதா குறித்து யுவனின் தைரியமான கருத்து

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இடத்தை அவ்வளவு எளிதில் யாராலும் நிரப்ப முடியாது என்ற உண்மை அனைவருக்கும் தெரிந்திருந்த போதிலும் தங்களுடைய பணம், பதவியை காப்பாற்றி கொள்வதற்காக அவருடைய இடத்தை பிடிக்க ஒருசிலர் முயன்று வருகின்றனர்.

ஜெயலலிதா கோஹினூர் வைரம் போன்றவர். நடிகர் சங்க அஞ்சலி கூட்டத்தில் ரஜினிகாந்த் புகழாரம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் சங்கம் இன்று அஞ்சலி செலுத்தியது. சென்னை கோடம்பாக்கத்தில் ரஜினிகாந்த் அவர்களுக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. நடிகர் சங்கத்தலைவர் நாசர் உள்பட நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள், ரஜினிகாந்த் உள்பட அனைத்து நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டனர்.

ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு படத்திற்கு பகவத் கீதை டைட்டில்?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.