2000ஐ தாண்டிய ராயபுரம், 1000ஐ நெருங்கும் இன்னொரு மண்டலம்: சென்னை கொரோனா நிலவரம்

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த ஒரு வாரமாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி கொண்டே வருகிறது. இருப்பினும் தமிழக மக்கள் அதனை சீரியஸாக எடுத்து கொள்ளாமல் தங்கள் இயல்பான பணிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சற்றுமுன்னர் சென்னை மாநகராட்சி, சென்னையின் 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி சென்னை ராயபுரத்தில் முதல்முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2000ஐ தாண்டியுள்ளது. இங்கு 2065 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராயபுரத்தை அடுத்து கோடம்பாகத்தில் 1488 பேர்களும், திருவிக நகரில் 1253 பேர்களும், தேனாம்பேட்டையில் 1188 பேர்களும், தண்டையார்பேட்டையில் 1096 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னை அண்ணாநகரில் 924 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இம்மண்டலமும் 1000ஐ நெருங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் வளசரவாக்கத்தில் 740 பேர்களும், அடையாறில் 619 பேர்களும், அம்பத்தூரில் 472 பேர்களும், திருவொற்றியூரில் 322 பேர்களும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

நயன்தாராவிடம் உள்ள பெஸ்ட் குணம்: டிடி வெளியிட்ட ரகசியம்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்து வருகிறது.

கொரோனா வறுமையால் பிச்சை எடுத்த இளம்பெண்ணை திருமணம் செய்த நபர்!

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பலர் தங்களுடைய வாழ்வாதாரங்களை இழந்து சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தந்தை ஆபாச படம் பார்த்ததால் கொலைகாரனாகிய 14 வயது மகன்: அதிர்ச்சி தகவல்

தந்தை ஆபாச படம் பார்த்ததால் அவரது 14 வயது மகன் 9 வயது சிறுமி ஒருவரை கொலை செய்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பாராட்டுகளை குவித்து வரும் ஒரு பெண் அதிபர்!!! யார் தெரியுமா???

உலக நாடுகளில் தலைமை வகிக்கும் பெண் அதிபர்கள் கொரோனா பரவலை மிக நேர்த்தியாக ஆர்ப்பாட்டம் இல்லாமல் கையாண்டனர் என்ற பாராட்டு மழை குவிந்து வருகிறது.

உலகத்தின் முதல் குவாரண்டைன் எப்போது தொடங்கியது தெரியுமா???

14 ஆம் நூற்றாண்டில் பரவிய பிளேக் நோய்த்தான் குவாரண்டைன் என்ற சொற்றொடரை உருவாக்கியது.