2000ஐ தாண்டிய ராயபுரம், 1000ஐ நெருங்கும் இன்னொரு மண்டலம்: சென்னை கொரோனா நிலவரம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த ஒரு வாரமாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி கொண்டே வருகிறது. இருப்பினும் தமிழக மக்கள் அதனை சீரியஸாக எடுத்து கொள்ளாமல் தங்கள் இயல்பான பணிகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சற்றுமுன்னர் சென்னை மாநகராட்சி, சென்னையின் 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி சென்னை ராயபுரத்தில் முதல்முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2000ஐ தாண்டியுள்ளது. இங்கு 2065 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராயபுரத்தை அடுத்து கோடம்பாகத்தில் 1488 பேர்களும், திருவிக நகரில் 1253 பேர்களும், தேனாம்பேட்டையில் 1188 பேர்களும், தண்டையார்பேட்டையில் 1096 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னை அண்ணாநகரில் 924 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இம்மண்டலமும் 1000ஐ நெருங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் வளசரவாக்கத்தில் 740 பேர்களும், அடையாறில் 619 பேர்களும், அம்பத்தூரில் 472 பேர்களும், திருவொற்றியூரில் 322 பேர்களும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Here's the zone wise breakup of Covid-19 positive cases in #Chennai.#Covid19Chennai#GCC #ChennaiCorporation pic.twitter.com/rHtazpPwj6
— Greater Chennai Corporation (@chennaicorp) May 26, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com