close
Choose your channels

நிச்சயதார்த்தத்திற்கு பின் திடீரென திருமணத்தை நிறுத்திய சென்னை யூடியூபர்!

Monday, February 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

யூடிபில் பிரபலமான மதன் கௌரிக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் சிவகார்த்திகேயன் உள்பட பல திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் சென்னையை சேர்ந்த மற்றொரு பிரபலமான யூடியூபர் இர்பான், தனது திருமணத்தை திடீரென நிறுத்தி விட்டதாக அறிவித்துள்ளார்

சென்னையை சேர்ந்த இர்பான் என்ற யூடியூபர், யூட்யூபில் சுமார் 3 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் வைத்துள்ளார் என்பதும் இவர் பல ரெஸ்டாரண்டில் உள்ள உணவுகள் குறித்து தினந்தோறும் வீடியோக்களை பதிவு செய்வார் என்றும் அவரது ஒவ்வொரு வீடியோவுக்கும் லட்சக்கணக்கில் பார்வையாளர்கள் குவிந்து வருவார்கள் என்றும் குறிப்பிடத்தக்கது. அவரது வீடியோவை பார்த்தால் எந்தெந்த ரெஸ்டாரண்டில் எந்தெந்த உணவு நன்றாக இருக்கும் என்பது தெரிந்து விடும் என்பதால் அவரது ஒவ்வொரு வீடியோவுக்கும் லைக்ஸ், கமெண்ட்ஸ்கள் குவியும்,

இந்த நிலையில் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் தற்போது தனது திருமணத்தை நிறுத்தி உள்ளதாக இர்பான் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். தனக்கும் தனக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுக்கும் செட்டாகவில்லை என்றும் மனம் ஒத்துப்போகாத நிலையில் இந்த திருமணத்தை நடத்துவது சரியில்லை என்று நினைத்ததால் திருமணத்தை நிறுத்தி விட்டதாகவும் கூறினார். தனது முடிவிற்கு தனது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் ஒத்துவராத பெண்ணுடன் வாழ்க்கை முழுவதும் வாழ முடியாது என்ற காரணத்தினால் திருமணத்தை நிறுத்தி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment