கொரோனாவில் இருந்து முற்றிலும் மீண்ட சென்னை வாலிபர்: ஒரு மகிழ்ச்சியான செய்தி
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் நிலையில், ஒரு ஆறுதல் செய்தியாக தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் ஒருவர் முற்றிலும் குணமடைந்து உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் இருந்து சென்னைக்கு சமீபத்தில் வந்த 21 வயது வாலிபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்ததன் பயனாக தற்போது அவர் முற்றிலும் குணமாகி விட்டார். அவருக்கு இரண்டு முறை இரத்தப் பரிசோதனை செய்யப்பட்டபோது இரண்டிலும் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதால் அவர் குணமடைந்து விட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் தனது வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்
ஏற்கனவே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவரும் மதுரையைச் சேர்ந்த ஒருவரும் கொரோனா வைரஸிலிருந்து மீண்டு, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது சென்னை வாலிபர் ஒருவரும் கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமாகி உள்ளார் என்ற செய்தி அனைவருக்கும் ஒரு நம்பிக்கையை அளித்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக கடுமையாக போராடி வரும் தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றியின் ஒரு பகுதியே இது என்று சொல்லலாம்
Update: The 21 Y M who traveled from Dublin, Ireland has completely recovered from #COVID2019 & discharged from #RGGH after 2 subsequent mandatory tests proved -ve. He will continue to b home quarantined for d next 14 days. Appreciate d team who took care of this young man. #CVB
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) March 27, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout