இளம்பெண்ணுடன் முறையற்ற உறவு: தட்டிக்கேட்ட அத்தையை கொலை செய்த சென்னை வாலிபர்

  • IndiaGlitz, [Saturday,May 16 2020]

இளம்பெண்ணுடன் முறையற்ற உறவு வைத்திருந்த சென்னை வாலிபர் ஒருவரை அவருடைய அத்தை தட்டிக் கேட்டதை அடுத்து, அத்தையை அந்த வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர் பெயிண்டர் ஆக பணி செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அவருடைய உறவு பெண் ஒருவருக்கும் முறையற்ற உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவருடைய அத்தை குணசுந்தரி, கணேஷிடம் தட்டி கேட்டதாக தெரிகிறது. இது குறித்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதை அடுத்து கணேஷ் காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து அத்தை குணசுந்தரியை குத்தினார்.

இதனால் குணசுந்தரி வலியால் துடித்த நிலையில் உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து குணசுந்தரியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் படுகாயத்துடன் ரத்தவெள்ளத்தில் மிதந்த குணசுந்தரி சம்பவ இடத்திலேயே சில நிமிடங்களில் மரணம் அடைந்தார். அப்போது கணேஷ் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இது குறித்து காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய கணேஷை தேடி வருகின்றனர். குணசுந்தரியின் உடலை பிரேத பரிசோதனைக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், தப்பியோடிய கணேஷை தேடி வருவதாகவும் கொளத்தூர் போலீசார் தெரிவித்தனர்.

More News

ஓடும் ரயிலில் 167 பயணிகள் திடீர் மாயம்: அதிகாரிகள் அதிர்ச்சி

மூன்றாம் ஊரடங்கு நாளையுடன் முடிவடையும் நிலையில் தற்போது ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே.

கொரோனா தடுப்பு மையமாக மாறும் உலகப்புகழ் பெற்ற கிரிக்கெட் மைதானம்!

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மிகவும் முக்கியமான ஸ்டேடியம் மும்பை வான்கடே ஸ்டேடியம் என்பது தெரிந்ததே. குறிப்பாக இந்தியாவில் பல முக்கிய கிரிக்கெட் போட்டிகள்

மாஸ்க் அணிந்து உடற்பயிற்சி செய்த வாலிபருக்கு ஏற்பட்ட விபரீதம்!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து மாஸ்க் அணிவது என்பது கிட்டத்தட்ட உலகம் முழுவதிலும் கட்டாயமாக உள்ளது.

தமிழகத்தில் 10 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 434 என சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கொரோன பரவல் நேரத்தில் குழந்தைகளை பாதுகாப்பது எப்படி???

கொரோனா பரவல் கடும் அச்சுறத்தலை ஏற்படுத்தி வந்தாலும் இன்னொரு பக்கம் ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு வருகிறது.