சென்னையில் இருந்து கூகுளுக்கு மீண்டும் ஒரு சுந்தர் பிச்சை!
- IndiaGlitz, [Thursday,June 27 2019]
தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை, உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனத்திற்கு கடந்த 2015ஆம் ஆண்டு சி.இ.ஓவாக பொறுப்பேற்றார். ஆண்ட்ராய்ட் எதிர்காலத்தை சரியாக ஊகித்து அதனை கூகுள் வசப்படுத்தி இன்று உலக அளவில் ஆண்ட்ராய்டை பிரபலமாக்கியவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கூகுள் நிறுவனம் இவருக்கு தரும் சம்பளம் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து இன்னொரு இளைஞர் கூகுள் நிறுவனத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த ஷ்யாம் என்பவரை கூகுள் நிறுவனம் பணிக்கு அமர்த்தியுள்ளது. இவருக்கு கூகுள் நிறுவனம் தரும் சம்பளம் ஆண்டுக்கு ரூ.60 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு ஐஐடியில் ஐஎம்.டெக் டிகிரியை ஐந்து வருடங்கள் படித்த ஷ்யாம், கடந்த ஜனவரி மாதம் கூகுள் நிறுவனத்தில் வேலைக்காக அப்ளை செய்திருந்தார். தற்போது அவருக்கு கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. இதுகுறித்து ஷ்யாம் கூறியபோது, 'எனக்கு கூகுள் கிளவுட் பிரிவில் பணிபுரிய வேலை கிடைத்துள்ளது. எனது பணியை சிறப்பாக செய்வேன் என்று கூறியுள்ளார். ஷ்யாமின் தந்தை பாபு, மத்திய அரசுப்பணியில் இருந்து வருபவர் என்பதும் தாயார் ஜெயஸ்ரீ தமிழக அரசு ஊழியராக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருடைய சகோதரர் சித்தார்த் அமெரிக்காவில் ஆய்வுப்படிப்பு படித்து வருகிறார்.