செல்போன் பேசிக்கொண்டே தெருவில் நடந்த சென்ற பெண் தீப்பிடித்து பலி: சென்னையில் பயங்கரம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் தெருவில் செல்போன் பேசிக்கொண்டே நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் மீது திடீரென தீ பிடித்ததால் அந்தப் பெண் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த லீமா என்ற பெண் தனது வீட்டின் பக்கத்தில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். பக்கத்து கடை என்பதால் அவர் நைட்டியுடன் சென்றதாக தெரிகிறது. பொருள்களை வாங்கி விட்டு, செல்போனில் அவர் தனது தங்கையுடன் பேசிக் கொண்டே வந்தபோது திடீரென அந்த பகுதியில் இந்த மின் இணைப்பு பெட்டி வெடித்து சிதறியது. இதனால் அதிலிருந்து கிளம்பிய தீப்பொறிகள் லீமா மீது பட்டதால் அவரது நைட்டியில் தீப்பிடித்தது. லீமா அணிந்திருந்த நைட்டி நைலான் என்பதால் தீ வேகமாக பரவியது. தீயின் வெப்பத்தால் கதறி அழுத லீமாவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் அதற்குள் தீ அவரது உடல் முழுவதும் பரவியது.
இதனையடுத்து லீமா சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 80% வரை தீ அவரது உடலில் பரவியதால் அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. எனவே அவர் பரிதாபமாக பலியானார்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த லீமா, கணவரின் மறைவிற்குப் பின் வேலை தேடி சென்னை வந்தார். ஒரே மகனுடன் கல்லூரி ஒன்றில் ஹவுஸ்கீப்பிங் வேலை செய்து வந்த நிலையில் தற்போது அவரும் மரணமடைந்து விட்டதால் அவரது மகன் தற்போது தனியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தெருவில் நடந்து சென்ற பெண் மின்சார பெட்டி வெடித்ததால் தீப்பிடித்து பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com