செல்போன் பேசிக்கொண்டே தெருவில் நடந்த சென்ற பெண் தீப்பிடித்து பலி: சென்னையில் பயங்கரம்!

  • IndiaGlitz, [Wednesday,January 08 2020]

சென்னையில் தெருவில் செல்போன் பேசிக்கொண்டே நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் மீது திடீரென தீ பிடித்ததால் அந்தப் பெண் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த லீமா என்ற பெண் தனது வீட்டின் பக்கத்தில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். பக்கத்து கடை என்பதால் அவர் நைட்டியுடன் சென்றதாக தெரிகிறது. பொருள்களை வாங்கி விட்டு, செல்போனில் அவர் தனது தங்கையுடன் பேசிக் கொண்டே வந்தபோது திடீரென அந்த பகுதியில் இந்த மின் இணைப்பு பெட்டி வெடித்து சிதறியது. இதனால் அதிலிருந்து கிளம்பிய தீப்பொறிகள் லீமா மீது பட்டதால் அவரது நைட்டியில் தீப்பிடித்தது. லீமா அணிந்திருந்த நைட்டி நைலான் என்பதால் தீ வேகமாக பரவியது. தீயின் வெப்பத்தால் கதறி அழுத லீமாவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் அதற்குள் தீ அவரது உடல் முழுவதும் பரவியது.

இதனையடுத்து லீமா சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 80% வரை தீ அவரது உடலில் பரவியதால் அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. எனவே அவர் பரிதாபமாக பலியானார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த லீமா, கணவரின் மறைவிற்குப் பின் வேலை தேடி சென்னை வந்தார். ஒரே மகனுடன் கல்லூரி ஒன்றில் ஹவுஸ்கீப்பிங் வேலை செய்து வந்த நிலையில் தற்போது அவரும் மரணமடைந்து விட்டதால் அவரது மகன் தற்போது தனியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தெருவில் நடந்து சென்ற பெண் மின்சார பெட்டி வெடித்ததால் தீப்பிடித்து பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

More News

மனைவியுடன் பைக்கில் சென்ற இளம் இயக்குனர் பலி! திரையுலகினர் அதிர்ச்சி

மனைவியுடன் பைக்கில் சென்ற 30 வயது இளைஞர் ஒருவர் பலியாகி உள்ளது திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது 

உள்ளாட்சி தேர்தலில் விஜய்யின் வெற்றி: ரசிகர்கள் மகிழ்ச்சி

சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மற்றும் திமுக கிட்டத்தட்ட சம அளவில் வெற்றி பெற்றுள்ளனர்

'தர்பார்' கட்-அவுட்டுக்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர்: திடீர் திருப்பம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படம் வெளியாக இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் இதுவரை இல்லாத அளவில் மிக பிரமாண்டமாக

அஜித் ரசிகர்களால் நஷ்டம்: இருப்பினும் 'தர்பாரை' வெளியிடும் திரையரங்கு!

உலகின் மிகப்பெரிய திரையரங்குகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டின் 'லீ கிராண்ட் ரெக்ஸ்' என்ற திரையரங்கில் ஒரு திரைப்படம் ரிலீஸ் ஆவதே பெருமைக்குரியதாக கருதப்படும் நிலையில்

பெண் ஊழியர்கள் டிரஸ் மாற்றும் இடத்தில் ரகசிய கேமிரா! வீடியோ வெளியானதால் அதிர்ச்சி

கோவை அருகே பெட்ரோல் பங்க் ஒன்றில் பெண் ஊழியர்கள் டிரஸ் மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்து வீடியோ எடுத்த சூப்பர்வைஸரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது