76 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய நீர்த்தேக்கம்… சென்னையின் குடிநீர் பஞ்சம் தீருமா???

  • IndiaGlitz, [Tuesday,November 24 2020]

 

சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு வசதியாக 76 ஆண்டுகளுக்கு புதிய நீர்த்தேக்கம் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு 65 மில்லியன் லிட்டர் நீர் சென்னை மக்களுக்கு கிடைக்கும் என்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

இதுவரை சென்னை மாநகரின் குடிநீர் தாகத்தை திருவள்ளூரில் உள்ள பூண்டி, புழல், சோழவரம், செம்பரவாக்கம் எனும் 4 ஏரிகள் மட்டுமே தீர்த்து வந்தன. மேலும் கடலூரின் வீராணம் ஏரியும் சென்னையின் பெரும்பலான நீர்த் தேவையை பூர்த்தி செய்து வந்தது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்வாய்க் கண்டிகை எனும் புதிய நீர்த்தேக்கம் சென்னை மக்களின் பயன்பாட்டுக்காகவே உருவாக்கப்பட்டு இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கண்ணன் கோட்டை மற்றும் தேர்வாய்க் கண்டிகை கிராமங்களில் இருக்கும் பழைய 2 எரிகளை இணைத்து புதிதாக ஒரு நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த அணைக்கான அடிக்கல் கடந்த 2013 ஆம் ஆண்டு நாட்டப்பட்டு, 380 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டு உள்ளது. 1,485 ஏக்கர் பரபரப்பளவில் உள்ள இந்நீர்த்தேக்கத்திற்கு, ஆந்திர மாநிலத்தில் இருந்து பெறப்படும் கிருஷ்ணா நதி நீர் மற்றும் கண்டலேறு –பூண்டி கால்வாய் பகுதியில் இருந்து 8.60 கிலோ மீட்டர் நீளத்திற்கு இணைப்பு உருவாக்கி அதன் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட இருக்கிறது.

இதனால் சென்னையின் மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்கு புதிதாக தினமும் 65 மில்லியன் லிட்டர் நீர் வழங்கப்படும். மேலும் நீர்த்தேக்க சுற்றுப் பகுதிகளில் உள்ள 700 ஏக்கர் விவசாய நிலங்களும் இப்புதிய நீர்த்தேக்கத்தினால் பயனடைய முடியும். இந்நீர்த் தேக்கத்தில் 5 புதிய மதகுகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

முன்னதாக சென்னையின் தண்ணீர் தேவைக்காக கடந்த 1944 ஆம் ஆண்டு பூண்டியில் உள்ள சத்யமூர்த்தி நீர் தேக்கம் உருவாக்கப்பட்டது. தற்போது 76 ஆண்டுகள் கழித்து தேர்வாய்க் கண்டிகை நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அதன் நீரளவை நீர்த்தேக்கத்தின் மேல் பகுதியில் இருந்து பார்த்து ரசிப்பதற்கு வசதியாக வியூ பாயின்ட் ஒன்றும் அமைக்கப்பட்டு உள்ளது. நீர் ஓட்டத்தை கணிப்பதற்கு வசதியாக அருகிலேயே 1,000 சதுர அடியில் ஆய்வு மாளிகை ஒன்று கட்டப்பட்டு உள்ளது. மேலும் பொறியாளர்கள் தங்குவதற்கு வசதியாக அறைகளும் உருவாகக்ப்பட்டு உள்ளன.

More News

ரியோ கேப்டன்ஷிப் குறித்து பேசியது யார்? பாலாஜிக்கு குறும்படம்!

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரியோவின் கேப்டன்ஷிப் குறித்து ஆரி ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை சொல்ல, போட்டியாளர்களில் ஒருசிலர் பொங்கி எழுந்தனர். ஒட்டுமொத்தமாக ஆரியிடம்

வாயை திறந்தா ஒரே கலீஜ்: சம்யுக்தா-சனம் மோதல்!

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு இடையே சண்டை, சச்சரவு வருவது சகஜமான ஒன்றுதான் ஆனால் அந்த சண்டைக்காட்சிகள் தான் பார்வையாளர்களுக்கு சுவராஸ்யமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது 

பிறந்த குழந்தையைக் விமான நிலையத்தில் வீசிவிட்டு வேறு நாட்டுக்கு பறந்து சென்ற தாய்!!!

கத்தார் விமான நிலையத்தில் பிறந்து சில  கத்தார் விமான நிலையத்தில் பிறந்து சில தினங்களே ஆன பெண் குழந்தையைப் அதன் தாயே குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு

செம்பரபாக்கம் ஏரியின் நீர்மட்டம்!!!

சென்னையில் நேற்று முதல் பெய்துவரும் தொடர்மழையின் காரணமாக செம்பரபாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது

திமுகவில் இணைந்த எம்ஜிஆர்-சிவாஜியுடன் நடித்த பழம்பெரும் நடிகரின் மகன்!

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த காஞ்சித்தலைவன், ராஜாதேசிங்கு உள்ளிட்ட படங்களிலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி, ஆலயமணி, எதிரொலி, தெய்வப்பிறவி