சென்னை- விதிமுறை மீறி வாகனத்தில் ஊர் சுற்றினால் என்ன நடக்கும்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு மீறி வெளியே வருபவரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரித்து உள்ளது. அதிலும் சென்னையில் 2 முறை காவலர்களிடம் பிடிபடும் வாகனங்கள் திருப்பித் தரப்பட மாட்டாது என்ற எச்சரிக்கையை சென்னை காவல் துறை வெளியிட்டு இருக்கிறது.
இதனால் மக்கள் அத்யாவசியத் தேவைகளைத் தவிர மற்றபடி வெளியே வரவேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த மே 10 ஆம் தேதி முதல் 2 வாரங்களுக்கு ஊரடங்கு விதி அமல்படுத்தப்பட்டு இருந்தது. ஆனாலும் கொரோனா நோய்த்தொற்றின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தது. இதனால் மேலும் ஒரு வாரத்திற்கு அதுவும் தளர்வுகளற்ற ஊரடங்கு தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஊரடங்கு நேரத்தில் காய்கறி, மளிகை போன்ற அத்யாவசியத் தேவைகளுக்குக் கூட கடைகள் எதுவும் இயங்காது. மேலும் மருந்து, இறப்பு தொடர்பான சேவைகளுக்கு மட்டும் உரிய ஆவணங்களுடன் பயணிக்கலாம் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனால் ஊரடங்கு விதிமுறைகளை கண்காணிப்பதற்காக தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
இந்த விதிமுறைகளைப் பின்பற்றாமல் யாரேனும் வாகனத்தில் ஊர் சுற்றினால் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனக் காவல்துறை எச்சரித்து உள்ளது. அதிலும் சென்னையில் 2 முறை காவலர்களிடம் பிடிபடும் வாகனங்கள் திருப்பித் தரப்படமாட்டாது என்ற அறிவிப்பை சென்னை காவல்துறை வெளியிட்டு இருக்கிறது. சென்னையில் வாகனச் சோதனை நடத்துவதற்கு மட்டும் 320 வாகனச் சோதனை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments