இன்று சென்னையில் 1000% மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன்

  • IndiaGlitz, [Tuesday,July 11 2017]

கடந்த சில மாதங்களாக சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வெயில் கொளுத்தி வந்தது. நிலத்தடி நீர் இல்லாமல் குடிநீர் தேவைக்கே மக்கள் திண்டாடி வரும் நிலையில் நேற்று முன் தினம் இரவு சென்னையில் நல்ல மழை பெய்து பூமியை குளிர வைத்தது. இந்த மழை இன்னும் சில நாட்கள் தொடர வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் அவர்களின் அறிக்கை அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
குடையை எடுத்து வைத்து கொள்ளுங்கள். சென்னையிலும் மற்றும் தமிழ் நாட்டின் இதர பகுதிகளிலும் இன்று மழை பெய்ய போகிறது. 100 சதவீதம் என்று சொல்ல மாட்டேன். 1000 சதவீதம் என்று கூறுகிறேன். இன்றைக்கு மழை பெய்யா விட்டால் வானிலையை பற்றி விளக்குவதில் அர்த்தம் இல்லை.
இன்றைய நாளை ரொம்ப நாளாக எதிர் பார்த்து கொண்டு இருக்கிறோம். சென்னை மட்டும் அல்ல, வட தமிழ்நாடே மழை பெறப் போகிறது. உபரியாக கோவை, நீலகிரி மற்றும் அதற்கு அருகில் உள்ள மாவட்டங்கள் ஆன ஈரோடு, நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களும் மழை பெற போகின்றன.
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளும் மழை பெற போகின்றன. தென் தமிழ் நாட்டில் உள்ள சில மாவட்டங்களும் மழை பெற போகின்றன. தமிழ் நாட்டில் இருந்து இன்று மழை கிட்டாமல் இருந்தால் நீங்கள் துரதிஷ்டசாலி தான். இப்போதுதான் சென்னைக்கு வந்தேன். இன்னும் நிறைய பதிவுகள் இட உள்ளேன்' இவ்வாறு அவர் பதிவு செய்துள்ளார்.