சென்னை - கொல்கத்தா போட்டியின் சில சுவாரஸ்யங்கள்
- IndiaGlitz, [Wednesday,April 11 2018]
நேற்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் சில சுவாரஸ்யங்கள் உள்ளன. அவை என்ன என்று பார்ப்போம்
* சென்னை அணியின் கேப்டன் தோனியும், கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் விக்கெட் கீப்பர்கள்
* தோனி, தினேஷ் கார்த்திக் இருவரும் தமிழக கிரிக்கெட் ரசிகர்களின் பிரியமானவர்கள்
* இந்த போட்டியில் மொத்தம் 31 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. அதிக சிக்ஸர் அடித்த ஐபிஎல் போட்டியை சமன் செய்தது இந்த போட்டி. இதற்கு முன்னர் கடந்த ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கும் குஜராத் லயன்ஸ் அணிக்கும் நடைபெற்ற போட்டியில் 31 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டிருந்தது.
* சிஎஸ்கே சேஸ் செய்த 2வது பெரிய ஸ்கோர் இதுதான். இதற்கு முன்னர் 2012ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிராக 206 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றதே சிஎஸ்கே அணியின் அதிகபட்ச சேஸ் ஆகும். மேலும் இந்த இரண்டு போட்டியும் சென்னை மைதானத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
* ஐபிஎல் போட்டியில் கடைசி ஓவரில் 20 ரன்கள் கொடுத்த பந்துவீச்சாளர் என்ற பெருமையை(!) வினய்குமார் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் 19 ரன்களை டிண்டாவும், 16 ரன்களை பிராவோவும், 13 ரன்களை ஃபால்க்னர், நெஹ்ரா, மோகித் ஷர்மா ஆகியோர்களும் கொடுத்துள்ளனர்
* நேற்றைய போட்டியில் வினய்குமார் வீசிய கடைசி பந்தை சிக்சராக்கி வின்னிங் ஷாட் அடித்ததார் ஜடேஜா.
கடந்த 2012ஆம் ஆண்டு சென்னை மற்றும் பெங்களூர் அணி இடையிலான போட்டியிலும் வினய்குமார் வீசிய கடைசி பந்தை பவுண்டரியாக விளாசி வின்னிங் ஷாட் அடித்ததும் இதே ஜடேஜாதான்.