சென்னையில் மனைவியை கொலை செய்துவிட்டு கோவில் குருக்கள் ஆடிய நாடகம்

  • IndiaGlitz, [Monday,April 09 2018]

சென்னை வடபழனி சிவன் கோவிலில் அர்ச்சகராக பணிபுரியும் குருக்கள் ஒருவர் தனது மனைவியை நண்பருடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வடபழனி சிவன் கோவிலில் பிரபு என்பவர் அர்ச்சகராக உள்ளார். இவரும் இவருடைய மனைவி ஞானபிரியாவும் சிவன் கோவில் அருகிலேயே ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தனர். 

இந்த நிலையில் கடந்த 5ஆம் தேதி பிரபுவின் மனைவி ஞானப்பிரியா  வீட்டில் கைகால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். பிரபுவும் பலத்த காயங்களுடன் இருந்ததால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தபோது தன்னுடைய மனைவியின் நகைகளை ஒரு மர்ம நபர் கொள்ளையடித்துவிட்டு தங்கள் இருவரையும் தாக்கிவிட்டு சென்றுவிட்டதாக கூறினார். 

ஆனால் அவருடைய வீட்டின் அருகே இருந்த கண்காணிப்பு கேமிராவில் அவருடைய வீட்டிற்குள் யாரும் செல்லவில்லை என்பது தெரியவந்தது. எனவே போலிசாரின் சந்தேகம் பிரபுவின் மீது திரும்பியது. இதனையடுத்து போலீசாரின் ஸ்பெஷல் விசாரிப்பில் பிரபு தன்னுடைய மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பிரபு-ஞானப்பிரியா தம்பதிக்கு குழந்தை இல்லாததால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், அந்த ஆத்திரத்தில் மனைவியை நண்பர் மனோஜ் உதவியுடன் கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டார். மேலும் நகைகளையும் நண்பர் மனோஜிடம் கொடுத்து வைத்திருந்ததாகவும் தெரிகிறது. இதனையடுத்து பிரபு மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,.

More News

தமிழிசை என்னை பார்த்து பயப்பட வேண்டாம்: சத்யராஜ் பதிலடி

நடிகர் சங்கம் சார்பில் நடந்த அறப்போராட்டத்தின் இறுதியில் நடிகர் சத்யராஜ் ஆவேசமாக பேசினார். அதில் குறிப்பாக ராணுவமே வந்தாமல் பயப்பட மாட்டோம், காவிரி மேலாண்மை வாரியத்திற்கு தமிழராக குரல் கொடுப்போம்

40 ஆண்டுகளுக்கு முன் நாங்கள் நினைத்திருந்தால்? ரஜினியை சீண்டிய தமிழிசை

'40 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழர்கள், கர்நாடகாவை சேர்ந்தவரை நடிகராக ஏற்க மாட்டோம் என நினைந்திருந்தால் நீங்கள் சூப்பர் ஸ்டார் ஆகியிருக்க முடியுமா?

காவிரி பிரச்சனை குறித்து சிம்புவின் ஆவேச பேட்டி

காவிரி மேலாண்மை அமைப்பதற்குநடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் சிம்பு கலந்து கொள்ளவில்லை. இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் சிம்பு செய்தியாளர்களை சந்தித்தார்.

காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம் மற்றும் 1 வெள்ளி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் டேபிள் டென்னிஸ் போட்டியில் சிங்கப்பூரை வீழ்த்தி இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த தமிழ் நடிகரின் மகன்

காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வரும் நிலையில் பிரபல தமிழ் நடிகர் மாதவன் மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத் தந்துள்ளார்.