சென்னையில் மனைவியை கொலை செய்துவிட்டு கோவில் குருக்கள் ஆடிய நாடகம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை வடபழனி சிவன் கோவிலில் அர்ச்சகராக பணிபுரியும் குருக்கள் ஒருவர் தனது மனைவியை நண்பருடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வடபழனி சிவன் கோவிலில் பிரபு என்பவர் அர்ச்சகராக உள்ளார். இவரும் இவருடைய மனைவி ஞானபிரியாவும் சிவன் கோவில் அருகிலேயே ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 5ஆம் தேதி பிரபுவின் மனைவி ஞானப்பிரியா வீட்டில் கைகால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். பிரபுவும் பலத்த காயங்களுடன் இருந்ததால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தபோது தன்னுடைய மனைவியின் நகைகளை ஒரு மர்ம நபர் கொள்ளையடித்துவிட்டு தங்கள் இருவரையும் தாக்கிவிட்டு சென்றுவிட்டதாக கூறினார்.
ஆனால் அவருடைய வீட்டின் அருகே இருந்த கண்காணிப்பு கேமிராவில் அவருடைய வீட்டிற்குள் யாரும் செல்லவில்லை என்பது தெரியவந்தது. எனவே போலிசாரின் சந்தேகம் பிரபுவின் மீது திரும்பியது. இதனையடுத்து போலீசாரின் ஸ்பெஷல் விசாரிப்பில் பிரபு தன்னுடைய மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பிரபு-ஞானப்பிரியா தம்பதிக்கு குழந்தை இல்லாததால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், அந்த ஆத்திரத்தில் மனைவியை நண்பர் மனோஜ் உதவியுடன் கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டார். மேலும் நகைகளையும் நண்பர் மனோஜிடம் கொடுத்து வைத்திருந்ததாகவும் தெரிகிறது. இதனையடுத்து பிரபு மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்,.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments