சென்னையின் அடையாளமாக இருந்த தியேட்டர் மூடப்படுகிறதா? ரசிகர்கள் அதிர்ச்சி..!

  • IndiaGlitz, [Wednesday,February 14 2024]

சென்னையின் அடையாளமாக இருந்த தியேட்டர் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகள் மூடப்பட்டு திருமண மண்டபங்கள் ஆகவும் அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் ஆகி வருவது சினிமா ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சென்னையின் அடையாளமாகவே இருந்த உதயம் தியேட்டர் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அசோக் நகரில் உதயம், மினி உதயம், சூரியன், சந்திரன் என நான்கு ஸ்கிரீன்கள் இயங்கி வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்கள் திரையரங்கிற்கு வருவது குறைந்துவிட்டதாலும் சிறிய அளவிலான மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மட்டுமே தாக்கு பிடித்து வரும் நிலையில் இந்த திரையரங்கு விற்பனை செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது

இந்த திரையரங்கை பிரபல கட்டுமான நிறுவனம் ஒன்று வாங்கியதாகவும் சமீபத்தில் தான் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும் இந்த இடத்தில் தற்போது நவீன அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சாந்தி திரையரங்கம் உள்பட சென்னையில் பல பழமையான திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் தற்போது உதயம் திரையரங்க வளாகம் மூடப்பட்டிருப்பது திரை உலகினர்களுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.