இரவோடு இரவாக மூடப்பட்ட டிரெக்கிங் நிறுவனம்? நிறுவனர் தலைமறைவு?
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று தேனி அருகே ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய மாணவிகளை ஒருபுறம் மீட்கும் பணியில் இந்திய விமானப்படையும், தீயணைப்பு துறையினர்களும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வனத்துறையிடம் எந்தவித முன் அனுமதியும் இன்றி மாணவிகளையும், சிறுவர்களையும் எந்த வித பாதுகாப்பும் இன்றி டிரெக்கிங் அழைத்து சென்ற நிறுவனம் நேற்று இரவோடு இரவாக திடீரென மூடப்பட்டது. மேலும் இதன் நிறுவனரும் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
சென்னை பாலவாக்கத்தில் வீடு ஒன்றில் டிரெக்கிங் அலுவலகமாக இயங்கி வந்த இந்த டிரெக்கிங் கிளப்பை பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பீட்டர் என்பவர் நடத்தி வந்தார். மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை மற்றும் திருப்பூர் பகுதியை சேர்ந்த 27 பேர்களை 2 பேர் தலைமையில் இந்நிறுவனம் டிரெக்கிங்ற்கு அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் தான் நேற்று திடீரென இந்த டிரெக்கிங் குழு, காட்டுத்தீயில் சிக்கியுள்ளது. பொதுவாக கோடையில் டிரெக்கிங் செல்ல வனத்துறையினர் அனுமதி தருவதில்லை. அதிலும் சிறுவர்கள் டிரெக்கிங் செல்லும்போது வனத்துறை அலுவலர்களின் பாதுகாப்பில்தான் செல்ல வேண்டும். ஆனால் இந்த டிரெக்கிங் நிறுவனம் எந்த அனுமதியும் இன்றி, எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி டிரெக்கிங் சென்றதால் தான் 9 பேர்களின் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் சென்னை ட்ரெக்கிங் க்ளப் முறையான ஆவணங்கள் இன்றி செயல்பட்டதாக யாரேனும் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com