தெலுங்கானாவை அடுத்து பெற்றோர்களுக்க்கு எச்சரிக்கை விடுத்த தமிழகம்
- IndiaGlitz, [Thursday,March 22 2018]
சமீபத்தில் தெலுங்கானாவில் ஒரு அதிரடி அறிவிப்பு வந்தது. 18 வயதுக்கு குறைவானவர்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டினால், அந்த சிறுவர்களின் பெற்றோர்கள் கைது செய்யப்படுவார்கள் என்பதுதான் அது. இந்த அறிவிப்புக்கு பின்னர் சிறுவர்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவது அம்மாநிலத்தில் பெருமளவு குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. லைசென்ஸ் இல்லாத சிறுவர்கள் வாகனங்களை ஓட்டுவதால் அவர்கள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி சாலையில் செல்லும் அப்பாவிகளும் பாதிக்கப்படுவதால் தெலுங்கானா அரசு இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டது
இந்த நிலையில் தெலுங்கானாவை அடுத்து தமிழகத்திலும் இதேபோன்ற ஒருஎச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு குறைவான சிறார்கள் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பெற்றோர்களின் வாகனங்களை ஓட்டுவதால் சிறுவர்கள் பாதிக்கப்படுவதோடு, மற்றவர்களும் பாதிப்பதால் காவல்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை அடுத்து தெலுங்கானாவை போல் சென்னையிலும் இனி சிறார்கள் இருசக்கர வாகனங்களை இயக்குவது பெருமளவு குறையும் என்றும் இதனால் விபத்துக்களும் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.