சென்னை முதல் குமரி வரை இன்று கனமழை: தமிழ்நாடு வெதர்மேன்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தீபாவளிக்குப் பின் நேற்றும் இன்றும் சென்னையில் நல்ல மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அவ்வப்போது தமிழகம் மற்றும் சென்னையில் பெய்யும் மழை குறித்த விபரங்களை தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு வரும் தமிழ்நாடு வெதர்மேன் அவர்கள் இன்று சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மிக பலத்த மழை பெய்யும் என்றும் இன்று ஒரு அற்புதமான நாள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் மிக அதிக மழை பெய்ய இன்று வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை முதல் கன்னியாகுமரி வரை நல்ல மழை பெய்யும் என்றும் கூறியுள்ளார்/ குறிப்பாக தமிழகத்தின் தெற்கு கடலோர பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டது போலவே தூத்துகுடியில் 90 நிமிடத்தில் 100மிமீ மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துகுடியில் மிக கனமழையும் பெய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Thoothukudi 100 mm in last 90 minutes. Kanyakumari, Thoothukudi and Nellai are having massive day. pic.twitter.com/gjtl6VjHzB
— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) November 16, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments