வேலைக்கு சேர்ந்த முதல் நாளே ஐடி பெண் ஊழியர் மரணம் அடைந்தது எப்படி? அதிர்ச்சி தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை அம்பத்தூரில் ஹெச்.ஆர். பணியில் வேலைக்கு சேர்ந்த முதல் நாளே தனிதா ஜூலியஸ் என்ற இளம்பெண் எட்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்து மரணம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி கேகே நகரை சேர்ந்த தனிதா ஜூலியஸ் கடந்த சில வருடங்களுக்கு முன் சென்னைக்கு வேலை நிமித்தமாக வந்து வடபழனியில் உள்ள ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். அதன்பின்னர் அம்பத்தூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் ஹெச்.ஆர். ஆக பணிபுரிய வேலைக்கு அமர்ந்தார்.
இந்த நிலையில் வேலைக்கு சேர்ந்த முதல் நாளில் இவர் தன்னுடைய எட்டாவது மாடியில் உள்ள அலுவலகத்திற்கு மாடிப்படி வழியாக சென்று கொண்டு இருந்தார். அப்போது தனது மொபைல் போனில் தனது தந்தையுடன் வாட்ஸ்அப் சாட்டிங்கில் இருந்ததாகவும், அப்போது கவனக்குறைவாக அவர் எட்டாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனை உறுதி செய்யும் வகையில் எட்டாவது மாடியில் அவரது செல்போன் மற்றும் காலில் இருந்த ஒரு செருப்பு இருந்ததாகவும், அவர் கீழே விழுந்த இடத்தில் இன்னொரு செருப்பும் இருந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவரது செல்போனை ஆய்வு செய்தபோது வாட்ஸ் அப்பில் அவர் தந்தையுடன் சாட்டிங்கில் இருந்ததும் தெரியவந்தது. இதன் காரணமாக அவர் சாட்டிங் செய்து கொண்டே மாடிப்படிகளில் ஏறி கொண்டிருந்த போது தவறி விழுந்து இருக்கலாம் என தெரிகிறது.
இருப்பினும் சிசிடிவியை போலீசார் ஆய்வு செய்து வருவதாகவும், சிசிடிவி ஆய்வு செய்த பின்னரே அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தவறிக் கீழே விழுந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவரும் என போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments