ஐபிஎல் விளையாட சென்ற சிஎஸ்கே அணியில் கொரோனாவா? பரபரப்புத் தகவல்!!!

 

கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்தது. இந்தப் போட்டியில் விளையாட சென்னை சிஎஸ்கே அணியினர் கடந்த 21 ஆம் தேதி துபாய்க்கு சென்றனர். அங்குச் சென்ற வீரர்களுக்கு தனிமைப்படுத்தல் போன்ற நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. தற்போது சென்னையில் இருந்து சென்ற சிஎஸ்கே குழுவினருக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் 5 பேருக்கு கொரோனா இருப்பதை சிஎஸ்கே அணி நிர்வாகம் உறுதிப்படுத்தி உள்ளது.

இந்தியாவில் இருந்து ஐபிஎல் விளையாட சென்ற 51 பேர் கொண்ட குழுவில் நடத்தப்பட்ட சோதனையில் சென்னை சூப்பர் கிங்ஸ் குழுவைச் சார்ந்த 5 பேருக்கு கொரோனா இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் வேகப்பந்து வீச்சாளர் ஒருவரும் அடக்கம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் நடைபெறுமா என்ற சந்தேகமும் எழுப்பட்டு உள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வீரர்கள் மற்றும் ஊழியர்கள், பணியாளர்களுக்கு மேலும் ஒரு வாரம் தனிமைப்படுத்தல் அவசியம் என ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதைத்தவிர டைம்ஸ் ஆப் இண்டியா வெளியிட்ட இன்னொரு செய்திக் குறிப்பில் 12 உதவி பணியாளர்கள், ஒரு வேகப்பந்து வீச்சாளர் என 13 பேருக்கு கொரோனா உறுதிச் செய்யப்பட்டு இருப்பதாகக் கூறியிருக்கிறது. இந்தத் தகவல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவலையும் ஆழ்த்தும் விதமாக அமைந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. கடந்த 5 மாதங்களாக எந்த கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாத நிலையில் ஐபிஎல்லையே கிரிக்கெட் ரசிர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தனர். ஐபிஎல் தொடங்க விருக்கும் நேரத்தில் இப்படியொரு தகவல் வெளியாகி இருப்பதால் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

More News

வடகொரியாவில் நடக்கும் அரசியல் மர்மங்கள்!!! பதற வைக்கும் பின்னணி!!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கோமாவில் இருக்கிறார்.

கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் கொரோனாவுக்கு பலி: அதிர்ச்சி தகவல்

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்பியும், நடிகர் விஜய் வசந்தின் தந்தையும், பிரபல தொழிலதிபருமான வசந்தகுமார் சற்றுமுன் கொரோனாவுக்கு பலியானார். 

முதல்வர் பழனிசாமி தான் எங்கள் கடவுள்: 24 அரியர் வைத்திருந்த மாணவரின் வைரல் வீடியோ!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தேர்வுகள் நடத்த முடியாத நிலையில் சமீபத்தில் கல்லூரி மாணவர்களின் இறுதியாண்டு தேர்வு தவிர அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும்

எஸ்பிபி உடல்நிலை: சற்றுமுன் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை

பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிஎஸ்கே பந்துவீச்சாளர் உள்பட 13 பேருக்கு கொரோனா: துபாயில் பரபரப்பு

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பம் இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும்