close
Choose your channels

'வலிமை' அப்டேட் கேட்ட இங்கிலாந்து வீரரை கைப்பற்றிய சி.எஸ்.கே!

Thursday, February 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

2021ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் இன்று சென்னையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் பல முன்னணி வீரர்களை ஐபிஎல் அணிகள் போட்டி போட்டுக்கொண்டு எடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இங்கிலாந்து நாட்டின் சுழற்பந்துவீச்சாளர் மொயின் அலியை ஏலம் எடுத்துள்ளது. இந்த தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சமூக வலைதளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சமீபத்தில் சென்னையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றபோது அஜித் ரசிகர்கள் பீல்டிங் செய்து கொண்டிருந்த மொயின் அலியிடம் வலிமை அப்டேட்டை கேட்டனர் என்பதும், ரசிகர்கள் என்ன கேட்கிறார்கள் என்று புரியாமல் அஸ்வினிடம் ’வலிமை’ என்றால் என்ன என்று அவர் கேட்டதாகவும் அதற்கு அஸ்வின் விளக்கம் அளித்ததாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பதை பார்த்தோம்

தற்போது மொயின் அலி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ஆகிவிட்டதால் ’வலிமை’ குறித்த கூடுதல் தகவல்களை அவரே தெரிந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment