காதலியை கைப்பிடிக்கின்றார் சிஎஸ்கே வீரர்: திருமண நிச்சயதார்த்த வீடியோ வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் இது குறித்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பந்துவீச்சாளரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சூப்பர் பந்துவீச்சாளருமான ஷர்துல் தாக்கூர், தனது நீண்ட நாள் காதலியான மிட்டாலி பருல்கர் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இது குறித்த வீடியோவை ஷர்துல் தாக்கூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் உற்றார் உறவினர் நண்பர்கள் என 75 பேர் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் வரும் 2022 ஆம் ஆண்டு ஷர்துல்-மிட்டாலி திருமணம் நடைபெறும் என்றும் விரைவில் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
Congratulations Shardul Thakur ??pic.twitter.com/ccu8BMQ4f3
— Shivam Jaiswal ???? ❤️ (@7jaiswalshivam) November 29, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments