குறிப்பிட்ட நேரங்களில் ரயிலில் பயணிக்கலாம்....!தென்னக ரயில்வே அனுமதி....!
- IndiaGlitz, [Thursday,June 24 2021]
நிபந்தனைகளுடன் மின்சார ரயில்களில் பயணிக்க, தென்னக ரயில்வே அனுமதியளித்துள்ளது.
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளதால், பொது போக்குவரத்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் பேருந்து போக்குவரத்து, மெட்ரோ ரயில் சேவை, புறநகர் மின்சார ரயில்களில் நிபந்தனைகளுடன்பொதுமக்கள் பயணிக்க, தென்னக ரயில்வே அனுமதியளித்துள்ளது.
அந்த வகையில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் தங்களுடைய அடையாள அட்டையை காணிப்பித்து, 24 மணிநேரமும் பயணம் செய்து கொள்ளலாம். இவர்களுக்கு அனைத்து டிக்கெட்டுகள் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
யார், யார் எந்தெந்த நேரங்களில் பயணிக்கலாம்...?
குழந்தைகள் மற்றும் பெண்கள் 24 மணிநேரமும், எந்த தடையும் இல்லாமல் பயணம் செய்யலாம்.
ஆனால் ஆண்கள் மட்டும் காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை, கூட்டம் இல்லாத நேரங்களிலும், இரவு 7 மணி முதல் கடைசி ரயில் வரையும் பயணம் செய்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள் மற்றும் பயணித்தின்போது, பொதுமக்கள் முகக்கவசம் அணியாவிடில், அபராதமாக 500 ரூபாய் வசூலிக்கப்படும் எனவும், காய்ச்சல், இருமல் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் பயணங்களை தவிர்க்க வேண்டும் எனவும் ரயில்வே சார்பில் கூறப்பட்டுள்ளது.