சென்னையில் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை? மன அழுத்தம் காரணமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை அயனாபுரம் கே-2 காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த சதீஷ்குமார் என்பவர் இன்று காலை திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஜெயலலிதா நினைவிடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை பணியாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் ஒரே வாரத்தில் இரண்டு தற்கொலைகள் காவல்துறையில் நிகழ்ந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த தற்கொலை குறித்து விசாரணை செய்து வரும் போலீசார் காவல்நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்ததில் இரவுப்பணிக்கு காவல்நிலையம் வந்த சதீஷ்குமார், வெள்ளை தாளில் 4 வரிகள் மட்டும் எழுதிவிட்டு பின்னர் திடீரென துப்பாக்கியை எடுத்து தனது நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொண்டதாக தெரிய வந்துள்ளது.
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 28 வயது சதீஷ்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 2011ஆம் ஆண்டு முதல் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த இவர், 2014ஆம் ஆண்டு முதல் அயனாபுரம் காவல்நிலையத்தில் சட்டம் ஒழுங்கு சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். ரவுடிகளை ஒழிப்பதில் திறமையாக செயல்பட்ட சதீஷ்குமார் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout