தேசிய சாம்பியன்ஷிப் ரோலர் ஸ்கேட்டிங்: சென்னை மாணவி லக்‌ஷிதா சாதனை

  • IndiaGlitz, [Tuesday,April 27 2021]

ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டில் சென்னையை சேர்ந்த மாணவி லக்‌ஷிதா தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் பெற்று சாதனை புரிந்துள்ளார் 

சென்னையை சேர்ந்த ரஞ்சித் என்பவரின் 11 வயது மகள் லக்‌ஷிதா ஸ்கேட்டிங் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். இவர்  ஃபால்கன்ஸ் ஸ்பீட் ஸ்கேடிங் அகாடமியில் ஐந்து ஆண்டுகளாக பயிற்சி பெற்றார். 

இந்த நிலையில்  சண்டிகரில் நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று லட்சிதா 3 தங்கப் பதக்கங்களை கைப்பற்றி தேசிய சாம்பியன் பட்டத்தையும் வென்றார். இதனையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.