தமிழ்நாட்டில் இருந்து தனிமைப்படுத்தப்படுகிறதா சென்னை? அதிர்ச்சி தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு மிக அதிகமாக வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் தமிழகத்தின் மொத்த பாதிப்பில் 80 சதவீதத்துக்கும் மேல் அதிகமாக இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள மாவட்டங்களை தமிழகத்திலிருந்து தனிமைப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களை மட்டும் தனிமைப்படுத்தி மக்கள் இந்த நான்கு மாவட்டங்களில் இருந்து வெளியே செல்வதையும் உள்ளே வருவதையும் தடுக்க ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
இந்த நிலையில் இ-பாஸ் கொடுக்கும் அதிகாரிகளுக்கு சென்னையில் இருந்து யாரும் வெளியே செல்லவும் சென்னைக்கு யாரும் உள்ளே வரவும் மிக முக்கிய காரணம் இன்றி இ-பாஸ் வழங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
கொரோனா பாதிப்பு மிக அதிகம் உள்ள சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை தமிழகத்தில் இருந்து முற்றிலுமாக தனிமைப்படுத்தினால் இந்த நான்கு மாவட்டங்கள் மட்டுமின்றி மற்ற மாவட்டங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கலாம் என்பதே இப்போதைய தமிழக அரசின் எண்ணம் ஆக உள்ளதாக கூறப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout