இந்தியாவின் தங்க மகளை தக்க வைத்து கொண்ட விஜயகாந்த் மகன்

  • IndiaGlitz, [Tuesday,October 10 2017]

கடந்த ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்த இந்தியாவின் தங்க மகள் என்று அழைக்கப்படும் பி.வி.சிந்துவை மீண்டும் ஏலத்தில் எடுத்தது கேப்டன் விஜயகாந்த்தின் மகன் அணியான சென்னை ஸ்மாஷர்ஸ். 

கடந்த இரண்டு ஆண்டுகளாக பேட்மிண்டன் லீக் போட்டிகள் பெரும் வரவேற்புடன் நடந்து வரும் நிலையில் இந்த ஆண்டு வரும் டிசம்பர் 22ஆம் தேதி முதல் 3வது பிரிமியர் பேட்மிண்டன் போட்டிகள் தொடங்கவுள்ளது. இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் நேற்று ஐதராபாத்தில் நடந்தது.

இந்த ஏலத்தில் தங்கமகள் பி.வி.சிந்துவை ரூ.48.75 லட்சத்துக்கு ஏலம் எடுத்து சென்னை ஸ்மாஷர்ஸ் அணி தக்க வைத்து கொண்டது. இந்த அணிக்கு விஜயகாந்தின் மகன் பிரபாகரன் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே அணி சிந்துவை ரூ.39 லட்சத்திற்கு கடந்த ஆண்டும் ஏலத்தில் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவாலை ரூ.41.25 லட்சத்துக்கு அவாதே வாரியர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.