இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய 400 கிலோ தங்கம் எங்கே? எப்படி மீட்பது?
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை தி.நகர் சென்னை சில்க்ஸ் ஜவுளிகடையின் ஏழுமாடி கட்டிடம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக தீயில் எரிந்து முற்றிலும் சிதிலமடைந்துவிட்டது. தற்போது இந்த கட்டிடம் இடிக்கும் பணி நடந்து வருகின்றது.
இந்த நிலையில் இந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில் குமரன் நகை மாளிகையும் இயங்கி வந்தது. இந்த நகைக்கடையில் 400 கிலோ தங்கம், 2 ஆயிரம் கிலோ வெள்ளி, ரூ.20 கோடி மதிப்புள்ள வைர நகைகள் ஸ்டாக் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பொதுவாக ஒவ்வொரு நகைக்கடையிலும் இதுபோன்ற தீவிபத்து மற்றும் திருடர்களிடம் இருந்து நகைகளை பாதுகாக்க பாதுகாப்பு பெட்டகம் ஒன்று வைக்கப்பட்டிருக்கும். குமரன் நகை மாளிகையின் தங்க நகை பாதுகாப்பு பெட்டகம் கீழ்தளத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. வியாபாரத்திற்கு என ஷோகேஷில் இருக்கும் நகைகளை தவிர மீதி நகைகள் அனைத்தும் இந்த பெட்டகத்தில் தான் இருக்கும்.
இந்த நிலையில் 150 டிகிரி வெப்பம் மற்றும் கட்டிட இடிபாடுகள் காரணமாக பாதுகாப்பு பெட்டியின் நிலை என்னவென்று தெரியவில்லை. தரைத்தளம் வரை முழுவதுமாக இடிபாடுகள் அகற்றிய பின்னர்தன் பாதுகாப்பு பெட்டியின் நிலை குறித்து தெரிந்து கொள்ள முடியும்.
ஆயினும் தங்கம் 1000 டிகிரி செல்சியஸில் தான் உருகும். இந்த தீவிபத்தினால் அதிகபட்சம் 150 டிகிரி வரைதான் வெப்பம் உண்டாகியதாக கூறப்படுவதால் பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ள நகைகளுக்கு எந்தவித சேதாரமும் ஏற்பட்டிருக்காது என்றே கூறப்படுகிறது. இப்போதுள்ள ஒரே பிரச்சனை அந்த பாதுகாப்பு பெட்டகத்தை இடிபாடுகளுக்கு இடையே கண்டுபிடிப்பதுதான் என்றும் அந்த பெட்டகத்தை மீட்க உரிமையாளர் தரப்பு ஆலோசனை செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout