மீண்டும் பயங்கர தீ: தீ நகரானது தி.நகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் நேற்று அதிகாலை 4.45 மணிக்கு பிடித்த தீ, இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து எரிந்து வருகிறது. இன்று அதிகாலை சரியாக 3.19 மணிக்கு அலங்கார வளைவுகள் உள்பட கட்டிடத்தின் முன்பகுதி பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது. பின்னர் காலை 7 மணி அளவில் கட்டிடத்தின் உள்பகுதியும் இடிந்துவிழுந்ததால் கிட்டத்தட்ட கட்டிடத்தின் பெரும்பகுதி இடிந்துவிட்டது.
கட்டிடம் இடிந்து விழுந்தாலும் தீ இன்னும் கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது. தீயணைக்கும் பணியில் சுமார் 450 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கட்டிடத்தின் முன்பகுதி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்ட வீரர்கள் தற்போது உள்பகுதியில் எரிந்து வரும் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
ஹைட்ராலிக் எந்திரங்கள் மூலம் தொடர்ந்து தீ அணைக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்து காரணமாக தி.நகர், தீ நகராக மாறியதோடு, அந்த பகுதி முழுவதிலும் புகை மண்டலமாக காட்சி அளிக்கின்றது. புகை காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்காக மருத்துவர்கள் குழு தி.நகரில் முகாமிட்டுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com