மனைவியின் பிறந்த நாளை 14 குடும்பங்களை கொண்டாட வைத்த சென்னை நபர்
Send us your feedback to audioarticles@vaarta.com
மனைவியின் பிறந்தநாளை தன்னுடைய வணிக வளாக கட்டிடத்தில் வாடகைக்கு இருக்கும் 14 குடும்பங்களையும் கொண்டாட வைத்த கணவரால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை மாதவரம் என்ற பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் மொத்தம் 14 வகைகள் உள்ளன. அந்த வணிக வளாகத்தில் போட்டோ ஸ்டூடியோ, ஜெராக்ஸ் கடை, செருப்பு கடை, சலூன் கடை, டீக் கடை உள்ளிட்ட பல வகை கடைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக கடைகள் மூடப்பட்டு இருந்ததால் வாடகை கொடுக்க முடியாமல் தன்னுடைய வணிக வளாகத்தில் இருப்பவர்கள் கஷ்டப்பட்டு கொண்டு இருந்ததை பார்த்த ஏழுமலை, தனது மனைவியின் 49வது பிறந்தநாளை அடுத்து தன்னுடைய வணிக வளாகத்தில் கடை நடத்தி வரும் அனைவருக்கும் ஒரு மாத வாடகையை தள்ளுபடி செய்துள்ளார்.
இந்த சந்தோஷ செய்தியை கேட்ட அந்த 14 கடைக்காரர்களும், அவர்களுடைய குடும்பத்தினரும் ஏழுமலையின் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைக் கூறி நன்றியையும் தெரிவித்து உள்ளனர். ஏழுமலை அவர்களுக்கு ஒரு மாத வாடகையாக 14 கடைகளிலும் சேர்த்து சுமார் ஒரு லட்ச ரூபாய் வரை வரும். இருப்பினும் தனது மனைவியின் பிறந்த நாளை முன்னிட்டு தன்னுடைய வளாகத்தில் கடை நடத்தி வரும் அனைவருக்கும் இந்த உதவியை அவர் செய்துள்ளதால் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments