ஆன்லைன் லஞ்ச் வேண்டாம்: பெற்றோர்களுக்கு சென்னை பள்ளி நிர்வாகம் வேண்டுகோள்
- IndiaGlitz, [Saturday,March 16 2019]
பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு மதிய உணவாக ஆன்லைனில் ஆர்டர் செய்ய வேண்டாம் என் சென்னை பள்ளியின் நிர்வாகம், பெற்றோர்களை கேட்டுக்கொண்டுள்ளது.
சென்னையில் தினமும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஆன்லைன் உணவுகளை டெலிவரி செய்வதை பார்க்கும்போது வீட்டில் பலர் சமைப்பதில்லையோ என்று எண்ண தோன்றுகிறது. குறிப்பாக ஒரு வீட்டில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றால் அந்த வீட்டில் பெரும்பாலும் உபேர், ஸ்விக்கி, போன்ற ஆன்லைன் நிறுவனங்களின் உணவுதான் உள்ளது.
இதுமட்டுமின்றி பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கும் பெற்றோர்கள் ஆன்லைன் மூலம் லஞ்ச் ஆர்டர் செய்துவிடுகின்றனர். இந்த நிலையில் சென்னை பள்ளி நிர்வாகம் ஒன்று இதுபோன்று மாணவ, மாணவியர்களுக்கு ஆன்லைனில் லஞ்ச் ஆர்டர் செய்ய வேண்டாம் என அனைத்து பெற்றோர்களுக்கும் இமெயில் மற்றும் போன் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதையும் மீறி ஆர்டர் செய்தால் அந்த உணவுகள் டெலிவரி செய்யப்படாது என்றும் பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மாணவ மாணவியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு அனைத்து பெற்றோர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.