ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது?

  • IndiaGlitz, [Tuesday,June 06 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததால் அவரது தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வாக்காளர்களுக்கு அதிகளவில் பணப்பட்டுவாடா செய்ததாக ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்திற்கு புகார் வந்ததையடுத்து இடைத்தேர்தல் திடீரென ரத்து செய்யப்பட்டது.

ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணம் அடைந்தால் அந்த தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்ற விதி இருக்கும் நிலையில் நேற்றுடன் ஜெயலலிதா மறைந்து ஆறுமாத காலம் முடிந்துவிட்டது. இந்த நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலை நடத்துவது எப்போது என்பது குறித்து தேர்தல் ஆணையம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.

ஆர்.கே.நகரில் சுதந்திரமாகவும், நியாயமாகவும் தேர்தல் நடக்கும் என்ற நிலை எப்போது ஏற்படுமோ அப்போதுதான் அங்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. எனவே இப்போதைக்கு அங்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்பதையே இது காட்டுகிறது.