மனைவிகளின் உதவியால் வித்தியாசமான முறையில் தங்கம் கடத்திய சென்னை நபர்
Send us your feedback to audioarticles@vaarta.com
வெளிநாட்டில் இருந்து தங்கத்தை சட்டவிரோதமாக கடத்தி வரும் கும்பல்கள் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான முறைகளை கடைபிடித்தாலும் விமான நிலைய அதிகாரிகளின் கழுகுப்பார்வையில் சிக்கிவிடும் கதை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் சென்னையை சேர்ந்த பாலசந்திரன் என்பவர் இரண்டு மனைவிகளுடன் வாழ்ந்து வருபவர். இவர் தனது சொந்த வீட்டை சமீபத்தில் ரூ.65 லட்சத்திற்கு விற்பனை செய்து அந்த பணத்தை கொண்டு வெளிநாட்டில் இருந்து தங்கத்தை கடத்தி வந்துள்ளார். விமான நிலைய அதிகாரிகளுக்கு சந்தேகம் வராதவகையில் ஒவ்வொரு முறையும் அவர் தங்கத்தை கடத்தும்போது மனைவிகளை மாற்றி மாற்றி பயன்படுத்தி வந்தார்
இந்த நிலையில் இன்று பாலசந்திரன் தனது மனைவிகளில் ஒருவரான ஷிவாதேவியுடன் தங்கத்தை கடத்தி மும்பை விமான நிலையத்தில் இறங்கியபோது விமான நிலைய அதிகாரிகள் அவர்கள் மீது சந்தேகம் அடைந்தனர். பின்னர் அவர்களை தனியறையில் வைத்து சோதனை செய்தபோது ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்ட பிராவில் ஷிவாதேவி தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவரும் கைது செய்யபப்ட்டனர். இதற்கு முன் ஓரிரு முறை வெற்றிகரமாக தங்கத்தை கடத்தி லாபம் பார்த்ததாகவும் இந்த முறை தான் மாட்டிக்கொண்டதாகவும் பாலசந்திரன் அதிகாரிகளிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com