சென்னை மழை குறித்து வெதர்மேன் கூறும் தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் நல்ல மழை பெய்த நிலையில் இன்றும் சென்னையில் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். சென்னையில் நேற்றை போலவே இன்றும் மழை இருக்கும் என்றும், ஈரப்பதமான வெப்பநிலையே பொதுவாக நிலவும் என்றும், மாலையில் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும் கேரளாவிலும், தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்திலும் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், குறிப்பாக கேரளாவில் அதிகபட்ச மழை பதிவாகும் என்றும் கூறியுள்ளார்.
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீரின் அளவு அதிகரித்து வருவதாகவும், விரைவில் இந்த அணை அதிகபட்ச கொள்ளளவான 141 அடியை அடையும் என்றும், இதனால் இடுக்கி அணைக்கு பெரும் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், வெதர்மேன் கூறியுள்ளார். கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் 100மிமீ அளவு மழை பதிவாகி இருப்பது இதுவரை இல்லாத மழை அளவு என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments