சென்னையில் 1000 கிலோ நாய்க்கறி பறிமுதல்: ஓட்டல் சப்ளைக்கு வந்தவையா?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜோத்பூரில் இருந்து சென்னைக்கு ரயிலில் கொண்டு வரப்பட்ட 1,000 கிலோ நாய்க்கறியை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நாய்க்கறி சென்னையில் உள்ள ஓட்டல்களுக்கு கொண்டு வரப்பட்டதாக இருக்கலாம் என்று கருதப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள ஒருசில ஓட்டல்களில் ஏற்கனவே கலப்பட கறி விற்பனை செய்து வருவதாக பரவலாக கூறப்பட்ட நிலையில் இன்று பிடிபட்ட நாய்க்கறி சென்னையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலுக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.
பொதுவாக சென்னை மக்கள் மட்டன், சிக்கன், பீப் கறிகளை மட்டுமே ஓட்டல்களில் சாப்பிட்டு வரும் நிலையில் நாய்க்கறி பிடிபட்ட தகவல் அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஜோத்பூரில் இருந்து ரயிலில் வந்த நாய்க்கறியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் #நாய்க்கறி #சென்னை #Egmore #train pic.twitter.com/n7AgX8fUiR
— Seithi Punal (@seithipunal) November 17, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout