இன்றைய எஸ்பிபி உடல்நிலை: மருத்துவமனை அறிக்கையால் ரசிகர்கள் மகிழ்ச்சி

  • IndiaGlitz, [Friday,August 21 2020]

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த 5ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்ட நிலையில் சற்று முன் வெளியிட்டுள்ள அறிக்கையில் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவியின் உதவியுடன் தொடர்ந்து உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவ நிபுணர் குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தனியார் மருத்துவமனை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

நேற்று எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களுக்காக உலகமே பிரார்த்தனை செய்த நிலையில் அந்த பிரார்த்தனையின் பலனாக தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் எஸ்பிபி உடல்நிலை சீராக இருப்பது குறித்து ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியினை தெரிவித்து வருகின்றனர்.

 

More News

1967ல் அண்ணாவின் ஆட்சி, 2021ல் விஜய் அண்ணாவின் ஆட்சி: ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு

1967இல் தமிழகத்தில் அறிஞர் அண்ணாவின் ஆட்சி என்றும் 2021ல் விஜய் அண்ணாவின் ஆட்சி என்றும் மதுரையில் விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

முதல்முறையாக இணையும் கார்த்திக் சுப்புராஜ்-சிவகார்த்திகேயன்!

பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பதும், இந்த படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து தற்போது தனுஷ் நடித்து முடித்துள்ள

இந்த நாட்டில் மட்டும் முகக்கவசம் அணியத் தேவையே இல்லை… திடுக்கிட வைக்கும் தகவல்!!!

கொரோனா வைரஸ் முதன் முதலில் தலைகாட்டிய நாடான சீனா தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து முற்றிலும் விடுபட்டு இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

எஸ்பிபியா இது? சிவாஜி கணேசனுடன் இருக்கும் பழைய புகைப்படம் வைரல்!

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் கடந்த 5ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் அவரது உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக இருக்கிறது

உழைக்கும் பெண்களுக்கு கைக்கொடுக்கும் தமிழக அரசு!!! இருசக்கர வாகனத்திற்கு மானியத் தொகையை உயர்த்தி அறிவிப்பு!!!

உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.