ஒருமையில் பேசிய பிரேமலதாவுக்கு செய்தியாளர்கள் கடும் கண்டனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்று ஆரம்பத்தில் இருந்தே குழப்பத்தில் இருந்த தேமுதிக, எந்தவித கொள்கைப்பிடிப்பும் இன்றி ஒரே நேரத்தில் அதிமுக, திமுக என இரண்டு கூட்டணியிலும் பேரம் பேசியது. மோடி பிரதமர் என்றாலும் ஓகே, ராகுல்காந்தி பிரதமர் என்றாலும் ஓகே, யார் 7 சீட் தருகின்றார்களோ அவர்களுடன் கூட்டணி என்ற தேமுதிகவின் மனப்பான்மையை அரசியல் விமர்சர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா சந்தித்தபோது தேமுதிகவின் கொள்கை குறித்து ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அப்போது பிரேமலதா அந்த நிருபரை ஒருமையில் பேசியதால் செய்தியாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர்களை ஒருமையில் மரியாதைக் குறைவாக பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தேர்தல் நேரத்தில் ஒரு அரசியல் கட்சி எந்த கூட்டணியில் இடம்பெறும் என்ற கேள்வி கேட்பது இயல்பு. இந்த அடிப்படையை கூட புரிந்து கொள்ள முடியாத ஆத்திரத்தில் தேமுதிக பொருளாளர் இருப்பது காலக்கொடுமை என பத்திரிகையாளர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
மேலும் அதிமுக கூட்டணியிலும் இடம் கிடைக்காத விரக்தியில் பிரேமலதா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் விமர்சனம் செய்து பேசினார். அதிமுக கடந்த தேர்தலில் கூட்டணி இல்லாமல் வெற்றி பெற்று என்ன பயன் என்றும், 37 அதிமுக எம்பிக்கள் இருந்தும் தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் கொண்டு வர முடியவில்லை என்றும் அவர் விமர்சனம் செய்தார்,.
கூட்டணி சேர முடியாததால் பிரமேலதா விரக்தி; செய்தியாளர் சந்திப்பில் அநாகரீகப் பேச்சு #PremalathaVijayakanth #DMDK #AIADMK #BJPAlliance pic.twitter.com/UMiF8jTThh
— Sun News (@sunnewstamil) March 8, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments