சென்னையில் நிர்வாணமாக நடந்து சென்ற 20 வயது பெண்: பெரும் பரபரப்பு

  • IndiaGlitz, [Thursday,January 30 2020]

சென்னையின் பிசியான சாலைகளில் ஒன்றாகிய ராயப்பேட்டை சாலையில் 20 வயது பெண் ஒருவர் திடீரென உடை ஏதும் இன்றி நிர்வாணமாக நடந்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ராயப்பேட்டை பகுதியில் இன்று அதிகாலை 3 மணிக்கு 20 வயது இளம்பெண் ஒருவர் ஆடையின்றி நிர்வாணமாக நடந்து செல்வதைப் பார்த்து அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் பறந்தது.

இதனை அடுத்து அந்தப் பகுதிக்கு வந்த ராயப்பேட்டை போலீஸ் அதிகாரி தன் கையோடு கொண்டு வந்திருந்த துணியை எடுத்து அந்த பெண்ணுக்கு போர்த்தி விட்டார். பிறகு அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போது அந்தப் பெண்ணுக்கு தெலுங்கு தவிர வேறு எந்த மொழியும் தெரியவில்லை. 

மேலும் திடீரென அவர் வயிறு வலிக்கிறது என்று கூறியதால் அவர் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அந்தப் பெண் யார்? எதற்காக நிர்வாணமாக ரோட்டில் வந்தார்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. முதல் கட்ட விசாரணையில் அந்த பெண்ணுக்கு மன நலம் சரியில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது. இருப்பினும் இதுகுறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.