சின்மயி கோரிக்கையை தள்ளுபடி செய்த சென்னை காவல்துறை!

தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு வழக்கை உச்சநீதிமன்றம் உரிய முறையில் விசாரிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி பின்னணி பாடகி சின்மயி சென்னை காவல்துறைக்கு மனு ஒன்றை விண்ணப்பித்திருந்தார்.

இந்த மனுவை பரிசீலனை செய்த சென்னை காவல்துறை பாடகி சின்மயி போராட்டத்திற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. பாடகி சின்மயி மனுவை பரீசீலனை செய்ததாகவும், நீதித்துறைக்கே எதிராக நடைபெறும் போராட்டமாக இதனை கருதுவதால் இந்த போராட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என்றும் காவல்துறை விளக்கம் அளித்து அவரது விண்ணப்பத்தை தள்ளுபடி செய்துள்ளது.

முன்னதாக மே 12ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாலை 3.30 மணிக்கு போராட்டம் நடத்த பாடகி சின்மயி அனுமதி கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

என் படத்தையும் பாருங்க! தியேட்டர் வாசலில் கெஞ்சிய தயாரிப்பாளர்

ஒவ்வொரு வெள்ளியன்றும் நான்கு அல்லது ஐந்து படங்கள் வெளியானபோதிலும், டிக்கெட் விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் பொதுமக்கள் ஒன்று அல்லது இரண்டு படங்களை மட்டும் பார்த்துவிட்டு

'பிக்பாஸ்3'யில் நான் இல்லை: பிரபல நகைச்சுவை நடிகர் விளக்கம்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டு பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வரும் ஜூன் மாதம் இந்த நிகழ்ச்சியின் மூன்றாம் பாகம் ஒளிபரப்பப்படவுள்ளது.

என் பாடல்களில் ஆபாசமா? புஷ்பவனம் குப்புசாமிக்கு செந்தில் பதிலடி!

ஒரே துறையில் பிரபலமாக இருப்பவர்களிடையே போட்டியும் பொறாமையும் ஏற்படுவது உலகம் முழுவதும் உள்ள ஒரு வழக்கமான நிலை ஆகும்.

விஷால்-அனிஷா திருமண தேதி!

விஷால், அனிஷா திருமண நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிலையில் விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது

டெல்லி ஜெனரேட்டாலும் தமிழக அரசை சரி செய்ய முடியாது: கமல்ஹாசன்

மதுரை அரசு மருத்துவமனையில் மின் தடை ஏற்பட்டிருந்தபோது ஜெனரேட்டரும் பழுதானதால் ஐந்து நோயாளிகள் மரணம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்