பிக்பாஸ் மும்தாஜிடம் சென்னை போலீஸார் விசாரணை: என்ன காரணம்?

  • IndiaGlitz, [Wednesday,May 11 2022]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான நடிகை மும்தாஜ் இடம் சென்னை போலீசார் விசாரணை செய்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அண்ணா நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் மும்தாஜ் வீட்டில் பணிபுரிந்த பெண் ஒருவர் திடீரென அவரது வீட்டில் இருந்து வெளியேறி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். மும்தாஜ் வீட்டில் தனக்கு வேலை அதிகமாக இருப்பதாகவும், மொபைல் போன் பேசுவதற்கும், டிவி பார்ப்பதற்கு கூட அனுமதி இல்லை என்றும், அதனால் அங்கு தனக்கு வேலை பார்க்க பிடிக்கவில்லை என்றும், தன்னை பெற்றோரிடம் ஒப்படைத்துமாறும் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் துறையினர் மும்தாஜிடம் விசாரணை செய்ததில் தனது வீட்டில் அக்கா தங்கை என இரண்டு பணிப்பெண்கள் பணிபுரிந்து வருவதாகவும், அவர்களுக்கு இடையே நடந்த பிரச்சனையால் அக்கா மட்டும் அங்கிருந்து செல்ல நினைப்பதாகவும் இருவருமே எங்கள் வீட்டு பெண்ணாகவே கருதி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து போலீசார் இன்னொரு பெண்ணிடம் விசாரணை செய்தபோது அவர் மும்தாஜ் வீட்டில் பணிபுரிய விருப்பம் இருப்பதாக கூறினார். இதனை அடுத்து வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று கூறிய பெண்ணை அவரது சொந்த ஊருக்கு அனுப்ப அவரது பெற்றோருக்கு போலீஸார் தகவல் கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.