ஹெல்மெட் போடாத வாகன ஓட்டிகளை மிரட்டிய எமன்! அண்ணா சாலையில் பரபரப்பு

  • IndiaGlitz, [Saturday,March 24 2018]

இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் போட வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்ட நிலையிலும் அதன் முக்கியத்துவம் தெரியாமல் இன்னும் பலர் ஹெல்மெட் இன்றி இருசக்கர வாகனங்களில் பயணம் செய்து வருகின்றனர். இதுகுறித்த விழிப்புணர்வை போக்குவரத்து காவல்துறையினர்களும் வித்தியாசமான முறையில் செய்துகொண்டு வருகின்றனர்

சமீபத்தில் நாகர்கோவிலில் உள்ள ஒரு போக்குவரத்து காவலர் ஹெல்மெட் போடாத வாகன ஓட்டிகளை நாற்காலிகளில் உட்கார  வைத்து அவர்களுக்கு ஸ்வீட் கொடுத்து உபசரிப்பு செய்து அதன் பின்னர் ஹெல்மெட் போட வேண்டிய அவசியம் குறித்து விளக்கினர். அதிகாரமாக சொல்வதைவிட அன்பாக சொல்லும் இந்த முறையால் அந்த பகுதியில் ஹெல்மெட் போடாதவர்களின் எண்ணிக்கை குறைந்துவருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சென்னை அண்ணா சாலையில் ஹெல்மெட் போடாமல் வந்த வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீசார் ஒருவர் எமன் வேடத்தில் வழிமறித்து மிரட்டல் விடுத்துள்ளோடு ஹெல்மெட்டின் அவசியம் குறித்து கூறினார்.  இந்த புதுமையான டெக்னிக் நிச்சயம் பயனளிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது.